பொதுவாக நம்மில் பலருக்கும் அழகாக தேவதை மாதிரி இருக்க வேண்டும் என்ற ஆசை காணப்படும்.
இதற்காக விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகித்து தற்காலிக அழகை பெறுவதுண்டு.
ஆனால் இது சில சமயங்களில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
இதனை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களை கொண்டு எளிதில் தேவதை போல் காட்சியளிக்க முடியும்.
அந்தவகையில் தற்பாது இயற்கை முறையில் எப்படி நாள் முழுவதும் தேவதையாக ஜொலிக்க முடியும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
- லேசான ரோஸ் நிறமுள்ள பன்னீர் ரோஜா இதழ்கள் இதனுடன் காய்ச்சாத பால், கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து முகம், கழுத்து பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான நீரில் கழுவி துடைத்தால் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
- சந்தன கட்டை இதில் பால் தெளித்து உரைத்து சந்தனத்தை எடுத்து அதில் ஒரு 5 டீஸ்பூன் அளவு வந்ததும் அதில் பால், பன்னீர், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். முகத்தில் தடவி அவை காய காய பஞ்சில் பாலை தொட்டு முகத்தில் ஒற்றி எடுங்கள். சரியாக 20 நிமிடங்கள் கழித்து முகத்தை பாலில் கழுவி எடுங்கள்.
- பாசிப்பருப்பு மாவுடன் கெட்டித்தயிர், கற்றாழை சாறு, பால் சேர்த்து நன்றாக குழைத்து கொள்ளுங்கள். முகம், கை, கழுத்து பகுதியில் தடவி ஃபேஸ் பேக் போல் போட்டு 30 நிமிடங்கள் வரை காய விட்டு பிறகு பால் நனைத்த பஞ்சில் முகத்தை துடைத்து எடுத்துவிடுங்கள். இப்போது மாய்சுரைசர் போட்டு இலேசாக மசாஜ் செய்யுங்கள். முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- வெந்தயத்தை ஊறவைத்து மூன்று மணி நேரத்துக்கு பிறகு மிக்ஸியில் அரைத்து பால் சேர்த்து க்ரீம் போல் குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி வரவும். 25 நிமிடங்கள் கழித்து முகத்தை பாலில் கழுவினால் உங்கள் கை முகத்தில் படும் போதே முகம் வழுக்கி கொண்டு போகும்.
- தக்காளியை துண்டு துண்டாக வெட்டி அதில் சர்க்கரை தோய்த்து முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். ஒரு பத்து நிமிடங்கள் இப்படி செய்தால் போதும் பொலிவிழந்த முகம் கலையாகும். உடனடியாக வெளியே செல்வதற்கு ஏற்ற பளபளப்பான முகத்தை அடுத்த அரைமணி நேரத்தில் பெறலாம்.