ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் மக்களின் இதயங்களை திருடியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரண்டு குழுக்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் சின்னம் தவிர்ந்த வேறு எதுவும் மாற்றமடையாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் இதய சின்னத்தை தெரிந்து எடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
எனினும், ஜனாதிபதியும் பிரதமர் மக்களின் இதயங்களையே வென்று விட்டனர் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.