பிரபல கொமடி நடிகராக வலம்வரும் யோகிபாபுவிற்கும், மஞ்சு பார்கவிக்கும் கடந்த 5ம் திகதி திருமணம் நடைபெற்றது.
குடும்பத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவசரமாக நடைபெற்றது என்றும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் வைப்பேன். அப்பொழுது அனைவருக்கும் அழைப்பு விடுப்பேன் என்று தெரிவித்திருந்தார் யோகி பாபு.
இந்நிலையில் யோகி பாபுவின் ரசிகர்கள் அவரை வீட்டில் சென்று சந்தித்து, வாழ்த்து கூறியது மட்டுமின்றி திருமண கோலத்தில் மனைவி மஞ்சுவுடன் இருக்கும் புகைப்படத்தினை பரிசாக வழங்கியுள்ளனர். மிக மகிழ்ச்சியோடு மனைவியுடன் பரிசை பெற்றுக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.