விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜாராகவுள்ளார்.
தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கடந்த மாதம் 14 ஆம் திகதி அவரது இல்லத்தில் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்தனர்.
கடந்த 29 ஆம் திகதி ரஞ்சனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை இன்றையதினம் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்க இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.