புத்தளம் உடப்பு ,பள்ளிவாசல்பாடு தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட பிரதேசத்தில் ஓலை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் வீடு முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்த போதிலும் , வீடு முழுமையாக எரிந்துள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ள போதிலும், எதுவித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடு திடீரென தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.