புனேயில் நகைக்கடையில் மோதிரம் திருடியதாக இளம் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினேகலாதா பாட்டில் என்கிற 25 வயது மராத்தி இளம் நடிகையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புனே குற்றவியல் பிரிவை சேர்ந்த டிசிபி பச்சன் சிங் பேசுகையில், லஷ்கர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட திருட்டு புகாரால் இவரை ஐபிசி 380ன் கீழ் கைது செய்துள்ளோம்.
ரூ.50,000 மதிப்பில் இரண்டு மோதிரங்களுடன் கைது செய்துள்ளோம், விசாரணையில் அவர் குற்றவாளி என தெரியவந்துள்ளது.
மேலும் அவர் துணை நடிகை என்பதும், மூன்று படங்களில் நடித்துள்ளதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை புனே இரண்டாம் யுனிட் பொலிஸார் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.