நடிகர் விஜய் சேதுபதி – திரிஷா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 96. இப்படத்திற்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து 96 படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரம் சமந்தாவும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சினிமாவை விட்டு நடிகை சமந்தா விலகுவதாக செய்தி வெளியானது. தற்போது இதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். 3 வருடத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகும் அர்த்தத்தில் நான் எதையும் கூறவில்லை. பத்து வருடத்துக்கு மேல் நடிகையாக சினிமாவில் நடிப்பேன்.
திரைத்துறை சவால் நிறைந்தது. இங்குநடிகைகள் தொடர்ந்து இருப்பது கஷ்டம். என்னால் நடிக்க முடியாவிட்டாலும், வேறு ஏதாவது ஒரு வகையில் சினிமாவுடன் தொடர்பில் இருப்பேன். தொடர்ந்து நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி வரலாம். இதை வைத்து சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று யாரும் கருத வேண்டாம் என கூறியுள்ளார்.