அமெரிக்க நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத்துடைய தலைமையகம் பெண்டகன் டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பான திட்டத்திற்கு சுமார் 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.71 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை பெற அமேசான் நிறுவனத்தின் சார்பாகவும் விண்ணப்பம் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெண்டகன் ஒப்பந்தத்தை வழங்கியது. இதனால் ஏற்பட்ட கோபம், அமேசான் நிறுவனம் சார்பாக ஒப்பந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக புகாரை எழுப்பியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை அங்குள்ள வாஷிங்க்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், தற்போது அமேசான் நிறுவனத்தின் சார்பாக புதிய மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், ஒப்பந்தம் வழங்குதல் தொடர்பான விவகாரத்தில், தங்களை புறக்கணித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு வழங்கி, அதிபர் டிரம்ப் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்த நடைமுறையில் ட்ரம்பின் தனிப்பட்ட அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அமேசானை ஒழித்துக்கட்ட அவர் உத்தரவிட்டுள்ளது தங்களுக்கு தெரியவந்துள்ளது என்றும், இந்த வழக்கு விசாரணையை அதிபர் டிரம்ப், முன்னாள் இராணுவ மந்திரி ஜேம்ஸ் மார்ட்ஸ், தற்போதைய இராணுவ மந்திரி மார்க் எஸ்பர் ஆகியோரிடம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.