நேபாளம் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க கிரிக்கெட் அணி 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளது.
கீம்பிப்பூரில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் 2-ல் நேபாளம் மற்றும் அமெரிக்க அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த அனுபவமிக்க வீரரான சேவியர் மார்ஷல் (16) தவிர, அந்த அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
இதனால் அந்த அணி 12 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 35 ரன்கள் மட்டுமே குவித்தது.
நேபாளம் அணியில் அதிகபட்சமாக, ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் சந்தீப் லாமிச்சேன் 6 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
3 ஓவர்களை வீசிய சூசன் பாரி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்தபட்ச ரன்கள் சேர்த்த அணி என்கிற, மோசமான சாதனையை அமெரிக்க அணி படைத்துள்ளது.