திருகோணமலை – சேருவில, கண்டி வீதியில் வானுடன் லொறியொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளானோர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















