இலங்கை, இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கடனிற்கான காலத்தை நீடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமரிடம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
இலங்கை இந்தியாவுக்கு வட்டியுடன் சேர்த்து 962 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.
அந்த அடிப்படையில் இந்த வருடத்தில் மாத்திரம் 169.7 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.
முழுமையான மீள் செலுத்தும் திட்டப்படி இலங்கை இந்தியாவுக்கு 2021இல் 182 மில்லியன் டொலர்களையும், 2022இல் 168 மில்லியன்களையும் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இலங்கை சீனாவிடம் அதிகளாவான 5.2பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளது.
இதில் இலங்கை இந்த வருடத்தில் மாத்திரம் 674.4 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது.
இதற்கிடையில் இந்தியா மேலும் 400 மில்லியன் டொலர்களை கடனாக தர உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.