பெண் பயணி ஒருவர் ஓடும் பேருந்தில் அரைகுறை ஆடையுடன் மது அருந்தி சென்ற சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்து ஏதோ சத்தம் கேட்பதாகவும், மதுபான வாசனை வருவதாக பேருந்தை சோதனை செய்தார்.
சோதனையில், பேருந்து இருக்கையில் இளம்பெண் ஒருவர், அரைகுறை ஆடையுடன் மது அருந்திகொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அந்த பெண்ணை ஓட்டுநர் எச்சரித்த நிலையில் மீண்டும் சத்தம் போட்டுக் கொண்டே மது அருந்தி வந்ததால், அவர் பேருந்தில் இருந்த ஊழியர்கள் கீழே இறங்க சொல்லியுள்ளனர்.
அதன் பின்னர் சக பயணிகள் இரவு நேரம் என்பதால் தனியாக விடவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். எனினும் மதுபோதையில் இருந்த அப்பெண் பாண்டிச்சேரி செல்லும் வரை மீண்டும் மது அருந்திக்கொண்டு சத்தம் போட்டப்படியே பயணித்தார்.
இதனால், அப்பெண்ணின் ஆடை, செயல், நடவடிக்கையால் பயணிகள் அதிருப்தி அடைந்த நிலையில் பயணிக்க நேரிட்டது.