தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனின் வெற்றியாளர் முகென். நன்றாக விளையாடி வந்தாலும் இறுதி நிகழ்ச்சியில் பாடல் பாடி மக்களை கவர்ந்துவிட்டார்.
பட்டத்தை வென்று மலேசியா சென்ற அவர் அவ்வப்போது தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்து செல்கிறார். அண்மையில் அவரது அப்பா இறந்த செய்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
முகென் பிக்பாஸ் பிறகு படங்கள் கமிட்டாகி நடிப்பார் என்று பார்த்தால் முதன்முதலாக விளம்பரம் ஒன்று நடித்துள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.