ஐக்கிய தேசியக்கட்சிக்குள் முறுகல் நிலை தொடர்கின்ற நிலையில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த மாதத்தில் இந்தியாவுக்கு செல்கிறார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கிறார்.
பெங்களூரில் எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் அனில் கும்ளே ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமற்ற வகையில் இந்திய ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த வருடம் இடம்பெற்ற மாநாட்டில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.