கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஆசியாவிற்கு வெளியே பதிவான முதல் மரணம் என கூறப்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸால் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஏனைய நாடுகளிலும் மரணங்கள் ஏற்படுகின்றன.
சீனாவை தவிர்த்து பிலிபைன்ஸ் நாட்டில் முதல் மரணம் பதிவாகி இருந்தது.
இதுவரை ஆசிய நாடுகளில் ஏற்பட்ட மரணம் முதன்முறையாக ஆசிய நாட்டிற்கு வெளியில் பிரான்ஸில் மரணம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.