கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவின் வூஹான் மாகாணத்தில் ஆயிர கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
நோய் தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்காக உயிரிழந்தோரை சீனா அரசு எரியூட்டி(தகனம் செய்து) வருகிறது.
மனித உடலை எரியூட்டும் போது வெளிப்படும் சல்பர் டைஒக்சைட் எனும் (SO2) வாயு வெளிப்படும்.
இந்த வாயுவின் அளவு வூஹான் மாகாணத்தில் மட்டும் 1700ug/m^3 எனும் பிரமாண்ட அளவில் பதிவாகியுள்ளதாக நாஸா நிறுவனத்தை மேற்கோள்காடடி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக 80ug/m^3 அளவில் இருக்க வேண்டிய சல்பர் ஒக்சைட் அங்கு 1700ug/m^3 அளவில் இருப்பதனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்து எரியூட்டப்படும் உடல்களின் எண்ணிக்கை பல்லாயிர கணக்கில் இருக்க வேண்டுமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது!
இதேவேளை கொரோனா வைரஸ் (2019-nCoV) வெடிப்பின் மையப்பகுதியான வுஹானில் உள்ள சடலம் எரிக்கும் இல்லத்தின் ஊழியர் ஒருவரும் அவரது சக ஊழியர்களும் ஒவ்வொரு நாளும் தகனம் செய்ய வேண்டிய உடல்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகம் என்று கூறுகிறார்.
வூஹான் எரியூட்டும் இல்ல ஊழியரின் கணக்கின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் தினசரி சராசரி உடல்களின் எண்ணிக்கை ஜனவரி 22 முதல் ஒரு வூஹான் எரியூட்டும் இல்லத்தில் 225 முதல் 4,725 உடல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வுஹானில் பதிவுசெய்யப்பட்ட எட்டு எரியூட்டும் இல்லங்கள் உள்ளன.
எரியூட்டும் இல்ல ஊழியரின் கணக்கு உண்மையாக இருந்தால், இதன் பொருள் நகரத்தில் ஒரு நாளைக்கு 1,628 இறப்புகளும், கடந்த 21 நாட்களில் 34,200 பேரும் இறந்துள்ளனர்.
உயிரிழப்பின் எண்ணிக்கையை சீன அரசு பெருமளவில் மறைத்து வருவதாக உலகளவில் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதுடன் இது தொடர்பான பல்வேறு காணொளிகளும் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.