மட்டக்களப்பு – கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில் இரு கட்டுத் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் குழுவினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருந்தன.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இத்துப்பாக்கிகள் காட்டு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.