தமிழகத்தில் மனைவி மற்றும் காதலனை துடி துடிக்க வெட்டி கொலை செய்த கணவன் அரிவாளுடன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே புங்கவர்நத்தம் கிராமம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம் (59). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக பிரித்து சென்றுவிட்டார். இதனால் மாரியம்மாள்(45) என்பவரை சண்முகம் இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
சண்முகத்திற்கு மூத்த மனைவி மூலம் இரண்டு மகள்களும், 1 மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவி மாரியம்மாள் மூலம் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களில் மாரியம்மாளுக்கு பிறந்த மகன் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடைசி மகன் சித்த மருத்துவப் படிப்பு முடித்து கோயமுத்தூரில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சண்முகம் வீட்டிற்கு எதிரில் அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (28) என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. தினமும் கட்டிட தொழிலாளர்களுடன் காலையில் வரும் இவர், எதிர் வீட்டில் தனிமையில் இருந்த மாரியம்மாளிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளைடைவில் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. சண்முகம் தினமும் அதிகாலையில் எழுந்து வயலுக்க்கு சென்றுவிடுவதால், அவர் சென்றவுடன், புதிய வீட்டை பார்க்க வருவது போன்று வரும் ராமமூர்த்தி, மாரியம்மாளின் வீட்டிற்குள் சென்று பல முறை தனிமையில் இருந்துள்ளார்.
இது குறித்து தகவல் சண்முகத்திற்கு சிலர் கூறிய போதும், அவர் தன் மனைவி மீது இருந்த நம்பிக்கையில், அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.
ஆனால் சம்பவ தினத்தன்று வேலைக்கு சென்ற களைப்பால், காலையில் சண்முகம் வயலுக்கு செல்லாம், அசதியால் வீட்டின் உள் அறையில் தூங்கியுள்ளார். அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்த ராமமூர்த்தி, மாரியம்மாளிடம் பேச, மாரியம்மாளும் கணவர் வயலுக்கு சென்றுவிட்டார் என்று நினைத்து அவரிடம் தனிமையில் இருந்துள்ளார்.
அப்போது வீட்டில் பேச்சு குரல் கேட்டதால், விழித்து கொண்ட சண்முகம் எழுந்து பார்த்த போது, வீட்டின் முன் அறையில்
மாரியம்மாள் மற்றும் ராமமூர்த்தி 2 பேரும் கட்டிலில் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். அதன் பின் மரியம்மாளை சரமாரியாக வெட்ட இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சண்முகம், ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் சென்று காவல்நிலையத்தில் சம்பவத்தை கூறி சரண் அடைந்துள்ளார். பொலிசார் உடனடியாக குறித்த பகுதிக்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சண்முகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















