சுற்றாடல் துறை ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கறுவாத் தோட்டம் பொலிஸார் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை என்பதால், நீதவான் இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அல் ஹூசைன் இலங்கைக்கு விஜயம் செய்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி சம்பவம் தொடர்பாக வீதிகள் தொடர்பான சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தி ஜயந்த சமரவீர, விமல் வீரவங்ச உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.