இலங்கையால் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடிந்தமை வரவேற்கத்தக்க செயல் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் இலங்கைப் பிரதிநிதி வைத்திய கலாநிதி ராஷியா நாராயன் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் இருந்த பீதியை உரிய வழிகளில் அகற்ற இலங்கையின் அதிகாரிகள் உதவியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வரை இலங்கையில் சீன பெண் உட்பட்ட மூன்று பேரே இந்த தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதில் சீனப்பெண் முழுமையாக குணமான நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறவுள்ளார்.
ஏனைய இருவரும் குருநாகல் வைத்தியசாலையில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கை இந்த விடயத்தில் சிறப்பாக செயற்பட்டுள்ளது என உலக சுகாதார மையத்தின் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.