அதிக வரி அறவிடுதல் மற்றும் தற்போது அறவிடப்படும் கூடுதல் கட்டணங்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஆய்வு செய்து இன்று முதல் 30 நாட்களுக்குள் அதனை எளிமைப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவினை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர அனைத்து ஆளுநர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டின் முழு வரி மற்றும் வரி அல்லாத முறையை எளிமையாக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. மக்கள் வாழ்க்கையை எளிதாக்குவது, கொடுக்கல் வாங்கல் செலவுகளை குறைத்தல், ஊழல் முறைகேடுகளை அகற்றல் மற்றும் சிறு நிறுவனங்களிலிருந்து பெரிய நிறுவனங்களுக்கு வர்த்தகங்கள் மேற்கொள்ள உகந்த சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.