தென்னிலங்கையில் வீட்டின் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக தாயை கொலை செய்ய முயற்சித்த மகனை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிங்தோட்டை, கினிகுருந்த பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், 70 வயதான தனது தாயை தாக்கி, தீயிட்ட எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தாயுடன் வசித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் பாணந்துறை பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
சந்தேகநபரான கொலை செய்யப்பட்டவரின் மகன் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றுள்ளார். அதனை செலுத்துவதற்கு தாயிடம் பணம் கோரியுள்ளார்.
எனினும் அவரின் கோரிக்கையை தாய் மறுத்த நிலையில், வீடு மற்றும் காணிகளை எழுதி கொடுக்குமாறு மகன் கேட்டுள்ளார். அதற்கு தாய் முடியாதென கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த மகன் தாயை கொடூரமாக தாக்கியுள்ளார். எரிவாயு கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு தாய் உயிரிழந்து போன்றதனை வெளிப்படுத்துவதற்காக தாய் மீது தீ வைத்துள்ளார்.
எனினும் தாய் கூச்சலிட்டவுடன் அயலவர்கள் அங்கு வந்து தாயை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.