பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ், குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விசா கிடைகப்பெறாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதியுடனான பிரெக்ஸிட்டின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிரஜைகள் சமமாக நடத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிக்கு அமைய புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற முறைமையை பிரித்தானியா விரும்புவதாக உள்துறை அலுவலக செயலாளர் பிரிடி பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ், பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள், ஆங்கில மொழி ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என வலிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட அனுசரணையாளருடன், தொழில் திறனைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், அவர்களுக்கு 50 புள்ளிகள் வழங்கப்படும் என பிரித்தானிய உள்துறை அலுவலக செயலாளர் பிரிடி பட்டேல் தெரிவித்துள்ளார்.