அமெரிக்காவில் அதியுயர் பதவி ஒன்றுக்கு தமிழகத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொலம்பியா சர்கியூட் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 52 வயதான ஸ்ரீ. சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த இவர், அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா, அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக பணியாற்றினார்.
அமெரிக்க முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். 2011 ஆம் ஆண்டு முதல் முதன்மை துணை சட்டமா அதிபராக பதவி வகித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் தமிழரான சீனிவாசன் புதிய வரலாறு படைத்துள்ளார்.