பதுளை நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் ஒழுக்கம் குறித்து இடம்பெற்ற வாக்குவாதங்களே இந்த மோதலுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் முரைப்பாட்டளிக்கபட்டுள்ளது.
இதேவேளை இது குறித்துக் தெரிவித்த பாடசாலை அதிபர் சம்பவம் குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக மாத்திரம் தெரிவித்துள்ளார்.



















