அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கடும் விமர்சனத்தை வெளியிட்டார்.
அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இந்த நாட்டின் அபிவிருத்திக்கு ஜனநாயகமும், நல்லிணக்கமுமே இடையூறாக இருப்பதாக தெரிவித்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இந்நிலையில் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் எனக்குறிப்பிட்ட அவர் இப்படியானவர்களே இந்த அரசாங்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.



















