கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்கள் நான்கு பேர் மதவாச்சி, கோமரன்கடவெல பிரதேச வாவியில் மூழ்கிய உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் நீரில் மூழ்கிகொண்டிருந்த மேலும் நான்கு மாணவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் கப்பாற்றொஇய நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா-ஹாலிஎல விஞ்ஞானக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 86 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சென்ற பிறகு நேற்று மாலை கோமரங்கடவல பகுதியிலுள்ள விகாரையொன்றில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்குசென்ற பின்னர் விகாரைக்கு அருகாமையிலுள்ள மதவாச்சி குளத்தில் மாணவர்கள் நீராடும் வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் அனுஷத் சமாடீ (எட்டாம்பிட்டிய பிரதேசம்), உமேஷ் சிஹார் (கலஉட பிரதேசம்), நெதிக சஞ்சித் (இங்குறுகமுவ பிரதேசம்), அனுச அன்சன (கோடுவல எல்ல பிரதேசம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கோமரன்கடவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.