அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கல்லறை ஒன்றில் மரணதண்டனை பாணியில் கொல்லப்பட்ட மூவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
மெக்ஸிக்கோ நாட்டின் பிரதான சாலை ஒன்றில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 36 வயது நபரை புதைக்கப்பட்ட கல்லறை அருகிலேயே இந்த மூவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட அந்த மெக்ஸிக்கோ நாட்டவர் போதை மருந்து கும்பலில் தொடர்புடையவர் என்பதால்,
இந்த மூவரும் பழிக்குப் பழி வாங்கப்பட்டார்களா என்ற சந்தேகமும் விசாரணை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மூவரும் ஒரே வேளையில் கொல்லப்பட்டுள்ளது, எவருக்கேனும் தெரிவிக்கப்படும் செய்தியாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மூவரும் எப்போது கொல்லப்பட்டனர் என்பதும், எதற்காக கொல்லப்பட்டனர் என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
உள்ளூர் பொலிசார், தற்போது கண்காணிப்பு கமெரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.