இந்தியாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது மகன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து தன்னை ஒரு மாதம் பலாத்காரம் செய்தனர் என பெண் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் Bhadohi தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்த ரவீந்திரநாத் திருப்பதி.
இவர் மீது 40 வயதான பெண்ணொருவர் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி புகாரை கொடுத்துள்ளார்.
அதில், ரவீந்திரநாத், அவர் மகன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 2017ஆம் ஆண்டு என்னை ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்து ஒரு மாதம் தொடர்ந்து பலாத்காரம் செய்தனர். இதில் நான் கர்ப்பமான நிலையில் எனக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்தார்கள் என குறிப்பிட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து ஏழு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் நீதிபதி முன்னால் பதிவுசெய்யப்பட்டு, சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
ஏற்கனவே மற்றொரு பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.