யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த மிகவும் நற்குணம் நிறைந்த தமது மகளை கனடா மாப்பிள்ளை ஒருவருக்கு பெண்ணின் பெற்றோர் கடந்த 5 வருடங்களின் முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
குறித்த கனடா மாப்பிளையோ ஏற்கனவே கனடாவில் திருமணம் முடித்தவர் என கூறப்படுகின்ற நிலையில், யுவதி ஆட்சேபம் தெரிவித்தபோதும் பெற்றோர் அதனை காதில் வாங்காமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன் கனடா சென்ற மாப்பிள்ளை ஒருமாதத்தின் பின்னர் விவாகரத்து கேட்டு பெண்ணிற்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக மனவிரக்திக்கு ஆளான குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த குறித்த யுவதி மிகவும் நற்குணமுடையவர் என்பதுடன் மிகவும் அமைதியானவர் என கூறும் அயலவர்கள் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் பிள்ளையின் வாழ்க்கையை பெற்றோரே சீரழித்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் நல்லமுறையாக வாழவேண்டிய பிள்ளைகள் தற்பொழுது யாழில் தாண்டவமாடும் வெளிநாட்டு மோகத்தாலும், பெற்றவர்களின் சொல்லை தட்டமுடியாத காரணத்தாலும் பல இளம் தளிர்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்வது பெரும் வேதனை அழிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.