இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகின்ற நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்வடைந்து வருகிறது.
இலங்கையில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பெப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்த நிலையில், இன்று தங்கத்தின் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை!
யாழ்ப்பாணத்தில் இன்று (பெப்.21) ஒரு பவுண் ஆபரணத் தங்கம் (22 கரட்) 72 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 72 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தூய தங்கத்தின் விலை!
24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 79 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 78 ஆயிரத்து 800 ரூபாயாகக் காணப்பட்டது