எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் இ.தொ.கா களமிறங்கவிருப்பதாக இ.தொ.கா இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு புதியவர்கள் உள்வரவேண்டும். புத்திஜீவிகள் வரவேண்டும். இளைஞர்கள் வரவேண்டும். அதன் மூலம் எமது அரசியல் பலம் அதிகரிக்க வேண்டுமென கோரிகைக்கைவிடுத்திருந்தார்.
இந்நிலையில் , அதற்கு பதில் கொடுக்குமுகமாக கண்டி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் களமிறக்கப்படுவதாக இ.தொ.காவின் இளைஞரணி பொதுச்செயலளாளர் ஜீவன் தொண்டமான் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.