ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றரை மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகள் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.