அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியே பயணத்திற்காக என்று வடிவமைக்கப்பட்டுள்ள ‘மரைன் ஒன்’ ஹெலிகொப்டர் தொடர்பிலான முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி இருநாட்கள் பயணமாக எதிர்வரும் 24, 25 ஆம் திகதி இந்தியா செல்கிறார். இதன் போது இந்தியப் பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ட்ரம்ப், குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் உள்ள மோதிரா கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
ட்ரம்பின் இந்தியப் பயணத்தின் போது அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரத்தியேக ‘மரைன் ஒன்’ ஹெலிகொப்டரும் நேற்றைய தினம் அகமதாபாத் சென்றடைந்துள்ளது.
குறித்த ஹெலிகொப்டரில் அடங்கியுள்ள வசதிகள் மற்றும் அதன் தன்மைகள் தொடர்பில் முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
- அமெரிக்க விமானப்படையுடன் ஜனாதிபதியை இணைப்பதுதான் இந்த ஹெலிகொப்டரின் நோக்கமாகும். அமெரிக்க ஜனாதிபதி நீண்டதூர தொலைவுக்கு அதிகாரபூர்வ விமானங்கள் பயன்படுகின்றன. குறுகிய தொலைவு செல்வதற்கு மரைன் ஒன் ஹெலிகொப்டர் பயன்படுகிறது
- மரைன் ஒன், ஹெலிகொப்டர் என்று சொல்வதைக் காட்டிலும் பல்வேறு வசதிகள் நிரம்பிய வீடு என்று கூறலாம். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சில்கோர்க்ஸ்கி வகை ஹெலிகொப்டராகும். தற்போது விஹெச்-3 ஸீ கிங் வகை ஹெலிகொப்டரை ட்ரம்ப் பயன்படுத்தி வருகிறார். விரைவில் அதிநவீன விஹெச்-92ஏ பயன்படுத்தப்பட உள்ளது.
- மரைன் ஒன் ஹெலிகொப்டர் மணிக்கு 150 மீட்டருக்கும் அதிகமாக அதாவது 241 கி.மீ .வேகத்தில் பறக்க முடியும்.
- ஹெலிகாப்டரில் ஏவுகணைகள் வீசும் வசதி, ஏவுகணைகள் மறித்துத் தாக்குவது, ரேடார்கள், எச்சரிக்கை கருவி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.
- மரைன் ஒன் ஹெலிகொப்டருக்குள் 200 சதுர அடி ஓய்வெடுக்கும் அறையும், கழிப்பறையும் உள்ளன. 14 பயணிகள்வரை இந்த ஹெலிகாப்டரில் பயணிக்க முடியும்.
- மரைன் ஒன் ஹெலிகொடரில் மொத்தம் 3 இன்ஜின்கள் இருக்கின்றன. இதில் ஒரு இன்ஜின் பழுதடைந்தாலும் பறக்கமுடியும்.
- அமெரிக்க ஜனாதிபதி எப்போதும் கௌரவிக்கும் வகையில் இந்த ஹெலிகொப்டர் அவரோடு உடன் செல்லும்
- இந்த ஹெலிகொப்டரை இயக்குவதற்காகவே மரைன் ஹெலிகொப்டர் ஸ்குவார்டன் ஒன் எனும் படை இருக்கிறது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த ஹெலிகொப்டரை இயக்கும் பொறுப்பானவர்கள். நைட்வாக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் வகையில் இந்த ஹெலிகொப்டரில் மொத்தம் 4 பைலட்கள் இருப்பார்கள்.
- இந்த ஹெலிகொப்டர் ஸ்குவார்டன் ஒன் எனும் படை அமெரிக்க அதிபர், துணை அதிபர், அமைச்சர்களை அழைத்துச் செல்லும் பொறுப்புடையவர்கள்.
- அதிபரின் மரைன் ஒன் ஹெலிகொப்டரின் பாதுகாப்புக்காக எப்போதும் 5 துணை ஹெலிகாப்டர்கள் உடன் பறந்து செல்லும்.
- மரைன் ஒன் ஹெலிகொப்டரின் நோக்கமே அமெரிக்க அதிபர் எங்கு சென்றாலும், அதில் உள்ள வீரர்கள் முழு சீருடையில் வரவேற்று மரியாதை செலுத்துவதுதான்.
- ஜனாதிபதி ஹெலிகொப்டருக்குள் இருந்தால், அதன் சத்தம் உள்ளே கேட்காத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். மிகுந்த சத்தமாகப் பேசாமல் வழக்கமான குரலிலேயே பேச முடியும்.
- இந்த ஹெலிகொப்டர் இராணுவத்தின் மிகப்பெரிய சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.