அடி வயிற்றில் வலி ஏற்படுவது பொதுவான ஒன்றாகும்.
எனினும் மாறாக வலதுபுற அடிவயிற்றில் வலி ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இதற்கு சில நோய் அறிகுறிகள் காரணமாக இருக்கலாம்.
அவற்றினைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Appendicitis
- Appendicitis என்பது குடல்வாலழற்சி என அழைக்கப்படும்.
- இது விரல் வடிவில் குடலில் மேலதிகமாக வளரும் ஒரு பகுதியினால் ஏற்படும் வலியாகும்.
- இதனை சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவது அவசியமாகும்.
Muscle spasm and hernia
- இது தசை இழுப்பு மற்றும் குடல் இறக்கம் என அழைக்கப்படுகின்றது.
- அதிகமான உடற்பயிற்சி காரணமாக இந்நிலை ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
- அத்துடன் வேகமாக ஓடும்போது பிரிமென்றகடானது வழமைக்கு மாறாக அதிகமாக அசைகின்றது.
- அத்துடன் தசைகளில் நீரிழப்பும் ஏற்படுகின்றது.
- இவைற்றினால் தசைப்பிடிப்பு மற்றும் குடல் இறக்கம் என்பன ஏற்பட்டு வலியை உண்டாக்குகின்றது.
- குடல் இறக்கமானது அதிக எடையினை தூக்குவதன் மூலமும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீகரகக் கல்
- சிறுநீரகமானது அடிவயிற்றின் இருபுறமும் அமைந்திருக்கின்றது.
- இவற்றில் கல் காணப்படுவதும் வலியை உண்டாக்கும்.
- அடிவயிற்றில் மாத்திரமன்றி குறைந்தளவு இடுப்புவலியும் சிறுநீரகக்கல் உண்டு என்பதற்கான அறிகுறியாகும்.
- எனவே வைத்தியர்களின் உதவியை நாடி சிறுநீரகக்கல்லினை அகற்ற வேண்டும்.