முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர், சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிடம் முறை தவறி நடக்க முற்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரால் முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்குச் சென்ற பெண்ணிடம், அங்கு பணியாற்றும் மருத்துவர் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் பணிப்புரைக்கமைய கொழும்பு சுகாதார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு என்பன முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
நிர்வாக நடைமுறைக்கு அமைவாக, முதல்கட்ட விசாரணையின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.