மாமனிதர் கிட்டினன்-சிவனேசன் அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்ட தினம் புறப்பட்ட நேரம் அவர் பயணித்த வாகனம் ஆகிய விபரங்கள் செல்வராசா கஜேந்திரனுக்கு மாத்திரம் தான் தெரியும் என்பது?
புலிகளின் அழைப்பினை ஏற்று கொழும்பில் இருந்து வன்னிக்கு புறப்பட்ட அவர் கொழும்பில் நின்ற கஜேந்திரனுக்கு அவ்விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். யார் யார் போகின்றீர்கள்? என்ன வாகனத்தில் போகின்றீர்கள்? எத்தனை மணிக்கு புறப்படுகின்றீர்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார் கஜேந்திரன்.
இதன்போது ஏன் கேட்கிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு இல்லை நானும் உங்களுடன் வரத்தான் என்று கூறினாராம். நேரம் தொடக்கம் அத்தனையும் கூறியவுடன் சரி நான் வருகிறேன் என்று கூறிய கஜேந்திரன் கடைசி நேரத்தில் கோல் பண்ணி கூறினாராம் நான் வரவில்லை இங்கு அவசர வேலையொன்று இருப்பதாக.
கஜேந்திரனுக்கு மாத்திரம் தெரிந்த அந்த ரகசியங்கள் ஆழ ஊடுருவும் படையினருக்கு தெரிந்தது எப்படி? அந்த வாகனத்தில் அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வருகிறார் என்ற விடயம் எப்படி கொலையாளிகளுக்கு தெரியவந்தது? அவர் வன்னிக்கு வரும் விடயம் அரச படையினருக்கு ஓமந்தை சோதனை சாவடியை கடக்கும் போதுதான் தெரிய வந்திருக்கும் அப்படி அவர்கள் அறிந்து அதன் பின் ஆழ ஊடுருவும் படையினருக்கு தகவல் கூறி குறுகிய நேரத்தில் அவரின் வாகனத்தை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்றை நடத்துவது சாத்தியமற்ற ஒன்று…
கஜேந்திரனின் தொலைபேசி உரையாடல்கள் அரச படையினரால் ஒட்டுக்கேட்கப்பட்டதா? அல்லது அவராக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கினாரா? ஏனெனில் வெள்ளைவானில் கடத்தப்பட்ட அவரின் தம்பி மாத்திரமே இதுவரை உயிரோடு திரும்பியுள்ளார்.
அவரை விடுவிக்கும் அளவுக்கு கஜேந்திரனுக்கு இலங்கை புலனாய்வாளர்களோடு தொடர்பு இருந்தது. அத்தோடு நேரடியாக புலிகளோடு தொடர்புபட்டிருந்த அவர் நோர்வேயில் இருந்து நாடுகடத்தப்பட்டபோதும் இலங்கை அரசு அவரை விசாரணைகள் எதுவுமின்றி நாட்டுக்கு உள்ளே வரவிட்டது.
இதேவேளை அதே சமகாலத்தில் புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றசாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், அரச அதிபர் வேதநாயகன் ஆகியோர் நாலாம் மாடியில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
கஜேந்திரன் மீது இன்றுவரை ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்படாததற்கும், அவரின் தம்பி வெள்ளைவான் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டதற்கும் பின்னணியில் ஓர் டீல் இருக்கிறதென்பது மாத்திரம் தெரிகிறது.
அது மாமனிதர் கிட்டினன் சிவனேசன் படுகொலையோ அல்லது வெள்ளைக்கொடி விவகாரமோ அல்லது வேறு ஏதேனும் ஓர் நாட்டின் அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.



















