வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இரு புதிய டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர் சிவரஞ்சன் தெரிவித்தார்.
வவுனியாவில் கடந்த வாரத்தில் இரு புதிய டெங்கு நுளம்பு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் தமது இருப்பிடங்கள், காணிகள், வீடுகளை துப்பரவு செய்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், கைவிடப்பட்ட பொருட்களை அழித்து துப்பரவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க.சிவரஞ்சன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த பகுதிகளை சுகாதா ரத்துறையினர் பார்வையிட்டு வருவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இணங்கண்டால் அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எழுத்து மூலமாக அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது ஓமந்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் மூன்று இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவ்வாறு நுளம்பு பெருகுவதற்கேற்ப சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனையவர்கள் தமது பகுதிகளை சுத்தமாகவும் துப்பரவு செய்து வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.