ஈரான் நாட்டில் இருந்து கொரோனா பாதிப்புடன் திரும்பியதாக லெபனான் சுகாதாரத்துறையால் அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர் தமக்கு எந்த பாதிப்பும் இல்லை என சாதித்துள்ளார்.
இந்த விவகராம் தொடர்பாக லெபனான் சுகாதாரத்துறையால் தாம் நாளும் சித்திரவதைக்கு உள்ளாவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லெபனான் நாட்டவரான 45 வயது தக்ரித் அலி சக்ர் என்பவர் கடந்த வாரம் ஈரானின் கோமில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவ சோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்ட பின்னர் லெபனானின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர் அவர் என லெபனான் சுகாதார அமைச்சகத்தால் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டார்.
ஆனால் தமக்கு அதிக பனி காரணமாக ஏற்பட்ட உடல் நலக் கோளாறு தான் எனவும், அவர்கள் தவறாக கணித்துள்ளனர் எனவும்,
லெபனான் அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த சித்திரவதைக்கு கண்டிப்பாக பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் அவர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
பலர் தக்ரித் அலிக்கு எதிராக சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டும் வருகின்றனர்.
ஈரானில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள கோம் நகரில் சுமார் 6 மாத காலம் தங்கிவிட்டு, சமீபத்தில் லெபனான் திரும்பியுள்ளார் தக்ரித் அலி.
தாம் லெபனான் தேசத்தை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை எனவும், எனது தரப்பு வாதத்தை மட்டுமே முன்வைத்ததாகவும் தற்போது தக்ரித் அலி விளக்கமளித்துள்ளார்.