அமெரிக்க அதிபரை வரவேற்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள வீடியோவை நெகிழ்ச்சியுடன் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை(24.02.2020) இந்தியா வர உள்ளார். அவருக்கு பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், டிரம்பை வரவேற்கும் விதமாக அவர் சுற்றிபார்க்க உள்ள நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதனை அடுத்து, இந்தியர்கள் பலர் தங்களால் ஆன பல தயாரிப்புகளை செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பாகுபலி படத்தில் வரும் பாகுபலி கதாபாத்திரத்திற்கு பதிலாக தலையை மட்டும் டிரம்பாக மாற்றி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Look so forward to being with my great friends in INDIA! https://t.co/1jdk3AW6fG
— Donald J. Trump (@realDonaldTrump) February 22, 2020
இந்த வீடியோ பார்க்க சற்று காமெடியாக தெரிந்தாலும், மெலானியா டிரம்ப் உள்ளிட்ட பலரையும் தத்துரூபமாக மாற்றியுள்ளனர்.
இந்த வீடியோவை அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், இந்த வீடியோவை டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.