பாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை.
வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன.
வேர்க்கடலையை தினமும் 30 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல.
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலையை சாப்பிடலாம்.
இதில் தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
குறிப்பாக பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இதய நோய்கள் வராமல் பாதுகாப்பதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
இதில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையுடன் இருக்கவும் வழி வகுக்கிறது.
மூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். இதில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.