வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்த பாகுபலி பட வீடியோவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ம் ட்ரம்ப் ருவிற்றரில் பகிர்ந்துள்ளார்.
டிரம்ப் வருகிற 24ம் திகதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப் தம்பதி, புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.
அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ருவிற்றர் கணக்கு ஒன்றில், ட்ரம்ப் போரில் வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்யப்பட்ட பாகுபலி பட வீடியோ வெளியானது. இந்த வீடியோ பதிவை ட்ரம்ப் தனது ருவிற்றல் ரீ-ருவிற் செய்துள்ளார். அதில், இந்தியாவில் உள்ள எனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது குறித்து எதிர்நோக்கி இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
அந்த வீடியோவில், ட்ரம்ப், கையில் வாளுடன் போரிடுவது போன்றும், ரதம் ஒன்றில் பயணிப்பது போலவும் காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டு உள்ளன. பின்னணியில் ஜியோ ரே பாகுபலி என்ற பாடலும் இசைக்கப்படுகிறது. இதனுடன், படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த சிவகாமி வேடத்தில், அவருக்கு பதிலாக ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் வருவது போலவும் வீடியோவில் உள்ளது.
வீடியோ வெளியாகி 2 மணிநேரத்தில் 17 ஆயிரம் முறை பகிரப்பட்டு உள்ளது. சில வினாடிகள் பிரதமர் மோடி வருவது போன்றும் வீடியோ பதிவில் உள்ளது. முடிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைகிறது என்ற வாசகத்துடன் வீடியோ நிறைவடைகிறது.
https://twitter.com/Solmemes1/status/1231326273894526976