ஸ்பெயினின் மட்ரிட் உள்ளரங்க தடகள போட்டியில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் முப்பாய்ச்சலில் (ட்ரிப்பிள் ஜம்ப்) உலக சாதனை படைத்தார்.
நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ட்ரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீட்டர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன்னர் கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவின் டட்யானா லெபடேவா 15.36 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதனை தகர்த்து தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார் 24 வயதான யூலிமர் ரோஜாஸ்.