இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா, பாகிஸ்தான் அணி வீரரான பாபர் அஸாமின் பேட்டிங்கை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் இருக்கும் பாபர் அஸாம், இந்திய அணியில் இருக்கும் கோஹ்லியை போன்றே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக, சமீபகாலமாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இவர் பாகிஸ்தானுக்கு கிடைத்த வரம், பாகிஸ்தானின் கோஹ்லி என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா கூறுகையில், பாபர் அஸாமின் பேட்டிங்கை நான் பல காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மேலும் கராச்சியில் அவருடனும் விளையாடியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்.
விராட் கோலி, கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்மித் போன்ற வீரர்களின் வரிசையில் அவரை வைக்கலாம் . எல்லாவிதமான போட்டிகளிலும் தன்னை மாற்றிக் கொண்டு எளிதாக ரன்களை சேர்க்கிறார். அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் அவர் என்னையும் மிஞ்சி விட்டார் என்று கூறியுள்ளார்.