மாணவன் ஒருவன் மின்கம்பத்துடன் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் சிலர் அந்த விவகாரத்தில் தலையிட்ட வீடியோ காட்சியொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சக மாணவனை கட்டி வைத்து, அவரில் தண்ணீர் ஊற்றிய சம்பவத்தை இளைஞர் ஒருவர் கண்டிப்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.
எனினும், கட்டப்பட்ட மாணவரோ, சக மாணவர்களோ இளைஞர்களின் தலையீட்டை விரும்பவில்லை.
இந்த வீடியோ குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரத்தினபுரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சீவலி மகாவித்தியாலய மாணவனே வீடியோவில் காணப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி பகுதியில் பிறந்தநாளிற்குரிய சக நண்பனை கம்பத்தில் கட்டி வைத்து, வேடிக்கையில் ஈடுபடும் புதிய போக்கு உருவாகி வருவதாக சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து தமக்கு எந்த முறைப்பாடும் வரவில்லையென பொலிசாரும் தெரிவித்துள்ளனர்.