நம்மில் பலருக்கும் முகப்பருக்கள் இருக்கும். அதுவே முக அழகை கெடுப்பதாக இருக்கும் . நம்மில் 10% மக்களில் 9% மக்களுக்கு முகப்பருக்குள இருக்குமாம்.
பருக்கள் நம் முகத்தில் வந்து கருப்பு தழும்பாகவே மாறி விடும். அதிலும் சில பேருக்கு வாழ்நாள் முழுக்க ஆறாத வடுவாகவும் இருந்து விடும்.
இதை சரி செய்ய நீங்கள் அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தினால் போதுமானது. அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வகை எண்ணெய்கள் பூசுவதன் மூலமாக நம் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கலாம்.
ஆர்கனோ எண்ணெய்:
ஆண்டி-செப்டிக் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது. முகத்தில் உள்ள வடுக்களை போக்க இந்த எண்ணையை தாராளமாக உபயோகிக்கலாம்.
ஆர்கனோ எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை சமமாக கலந்து முகத்திற்கு தொடர்ந்து தேய்த்து வந்தால், முகப்பருக்கள் முற்றிலும் அழிந்து விடும்.
பெர்கமோட் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் மற்றும் பெர்கமோட் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து, முகத்தில் தொடர்ந்து ஒருவாரத்திற்கு தேய்க்க வேண்டும். பின்பு உங்கள் முகத்தில் உள்ள பரு மற்றும் வடுக்கள் காணமல் போவதை நீங்களே உணர்வீர்கள்.
கிராம்பு எண்ணெய்:
இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. கொஞ்சமாக திராட்சை விதைகள், கிராம்புஎண்ணெய் 2 ஸ்பூன், வைட்டமின்- ஈ எண்ணெய் நான்கு சொட்டுகள் ஆகியவற்றை மொத்தமாக கலக்கி கொள்ளலாம்.
பின்பு பருக்கள், வடுக்கள் உள்ள இடத்தில் இந்த எண்ணெய்-ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்பு முதல் அனைத்தும் மறைந்துவிடும்.
தேயிலை மர எண்ணெய்:
இதில் அலற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்க்கும் பண்பு மற்றும் கிருமி நாசினிகள் ஆகிய பண்புகள் இதில் உள்ளது. நம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வடுக்களை சரி செய்யும் தன்மை கொண்டது.
தேயிலை மர எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரியான அளவு எடுத்துக்கொண்டு கலக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து முகத்தில் தேய்த்து வந்தால், முகப்பரு பிரச்சனை காணாமல் சென்றுவிடும்.
லாவண்டர் எண்ணெய்:
லாவண்டர் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து முகத்திற்கு தேய்த்தால் தழும்பு மற்றும் பருக்கள் ஆகியவை மறைந்துவிடும்