நாகர்கோவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கான இரண்டு மில்லியன் ருபா நிதியில் கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடத் திறப்பு விழா வியாழக்கிழமை (27) காலை 10.00மணிக்கு மாதர் கிராமச்சங்க தலைவர் திருமதி சுரேஸ்குமார் சிவசக்தி தலைமையில் ஆரம்பமானது.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மண்டபத்தை திறந்து வைத்தார்.
தையல் பயிற்சியை முடித்த மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து சிறப்பித்த விருந்தினர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
சிறப்பு விருந்தினராக வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர், வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலர், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஐனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேசசபை வட்டார உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்துகொண்டனர்.