களனி பல்கலைகழகத்தின் 25 மாணவர்களிற்கு 2 வருட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை அகற்றிய குற்றச்சாட்டில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை (29) காலை 8 மணி முதல் இந்த தடை அமுலாகும். களனி பல்கலைகழக நிர்வாகத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.