வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக நோயாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பொது மக்கள் நடமாடும் இடங்களுக்கு சென்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தென் கொரியாவின் டொன்க் – இப்போ பத்திரிகையின் செய்திக்கமைய, அரச அதிகாரியான இந்த நபர் சீனாவுக்கு சென்று திரும்பியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் வட கொரியாவில் பதிவாகிய முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி என குறிப்பிடப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வடகொரியாவின் செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.




















