பதுளை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வேலைத்தேடிவந்த இருவர், ஊழியர் ஒருவரின் தொலைபேசியை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர் உறுதியளித்ததையடுத்து, தமக்கு தங்குமிட வசதி இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஹோட்டலின் மேல் மாடியில் அவர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தாம உடை மாற்றிவிட்டு வருவதாக கூறி, மேல்மாடிக்கு சென்ற இருவரும் பணியாளர் ஒருவரின் பெறுமதிமிக்க தொலைபேசியை திருடி சென்றுள்ளனர்.
குறித்த இருவர் தொடர்பான காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் சிக்கியுள்ளன.
இந்நிலையில் அவர்கள் , திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார்.
அத்துடன் சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.